அமெரிக்க அதிபரிடம் போனில் பேசிய பிரதமர் மோடி: உதவிக்கு நன்றி கூறியதாக தகவல்!

செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:13 IST)
இந்தியாவில் கொரோனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவுக்கு உதவி செய்ய பல நாடுகள் முன் வந்துள்ளன என்பதும் அவற்றில் குறிப்பாக அமெரிக்கா மிகப்பெரிய உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அமெரிக்காவிலிருந்து ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தாங்கள் இக்கட்டான நிலையில் இருந்தபோது இந்தியா உதவி செய்தது என்றும் இப்போது இந்தியாவுக்கு உதவி செய்ய வேண்டியது எங்கள் கடமை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுடன் இந்திய பிரதமர் மோடி போனில் பேசியுள்ளார். இருநாட்டு தலைவர்களும் கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்தனர். மேலும் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்