இயல்பு நிலை திரும்புவதற்கான வழியே தெரியவில்லை! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (08:55 IST)
அமெரிக்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி விட்ட நிலையில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பவதற்கான வழியே இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகளாவிய பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் மேலும் மேலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையிலும் அமெரிக்காவில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஃப்ளோரிடா மாகாணத்தில் டிஸ்னி லேண்டை திறந்த நிலையில் ஒருநாளில் மட்டுமே 15,299 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “வைரஸ் பரவல் நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகிறது. தற்போது உள்ள தொற்றுகளை பார்க்கையில் எதிர்காலம் குறித்த கேள்வி எழுகிறது. இயல்புநிலை திரும்பாமலே போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அனைத்து நாடுகளும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்