மன்னிப்பு கேட்டாரா விஷால்...? மீண்டும் இணையும் விஷால் - மிஷ்கின் கூட்டணி?

செவ்வாய், 14 ஜூலை 2020 (08:42 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வந்த ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதாக கூறப்பட்டது. மிஷ்கின் விஷாலிடம் அதிக பணம் கேட்டதாகவும் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறினார்.

இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மீதி பகுதியை விஷாலே இயக்குவதாக அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார். அதில் மிஷ்கின் பெயரை நீக்கியது, மிஷ்கின் பொது மேடையில் விஷாலை பொருக்கி பையன் என திட்டியதெல்லாம் பெரும் விவகாரமான ஒன்றாக பார்க்கப்பட்டது. அவ்வளவு தான் இனி இந்த கூட்டணி ஒருகாலம் ஒன்று சேராது என நினைத்திருந்த நிலையில் தற்ப்போது மீண்டும் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.

அதாவது, மிஷ்கின் இல்லாமல் இப்படத்தை இயக்கமுடியவில்லை என உணர்ந்த விஷால் அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் படத்தை இயக்கி முடித்து தரவேண்டியதாக இந்த செய்திகள் கூறுகிறது. மிஷ்கினும் அதற்கு ஒப்புக்கொண்டு படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மிஷ்கின் தரப்பில் இருந்தும் இதற்கான பதில் இன்னும் கிடைக்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்