மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இரு பிரிவைச் சேர்ந்த கிராம மக்கள் மோதி கொண்டதில் 85 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள பிளேட்டு என்ற மாகாணத்தில் பல கிராமங்கள் இருக்கின்றன. கடந்த திங்கட்கிழமை அன்று இப்பகுதியில் வசித்து வரும் கால்நடைகள் மேய்க்கும் நாடோடி பழங்குடியின மக்களுக்கும், அதே பகுதியில் உள்ள விவசாயம் செய்து வரும் பழங்குடியின மக்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
இதில்,ஒரு நிலத்தில் கால்நடை மேய்ந்தது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் ஒரு பிரிவினர் இடையேயான சண்டையாக மாறியது.
இதையடுத்து, கிராம மக்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கிராம் முழுவதும் வன்முறை ஏற்பட்டது.
கடந்த 3 நாளில் மட்டும் இந்த சண்டையால் 85 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்ரனர். தற்போது, அங்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.