அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் எடுத்துள்ள சபதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர் வரும் நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் அமெரிக்க முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி பேசி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தனது பிரச்சாரத்தில் பேசிய ட்ரம்ப் “அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலேயே ஒரு மோசமான வேட்பாளருக்கு எதிராக ஓடுவது மன அழுத்தத்தை அளிக்கிறது. நான் தோற்றால் என்ன செய்வேன் என உங்களால் கற்பனை செய்ய முடியுமா? வாழ்க்கையிலேயே ஒரு மோசமான அதிபர் வேட்பாளரிடம் தோல்வியடைந்ததால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன்” என கூறியுள்ளார்.