வெள்ளை மாளிகையில் குடியேரிய டிரம்ப் குடும்பம்!!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (10:55 IST)
அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் குடியேறி ஆறு மாதங்கள் ஆகின. 


 
 
ஆனால், டிரம்ப்பின் குடும்பத்தினர் 6 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் வெள்ளை மாளிகையில் குடியேறியுள்ளனர். 
 
வெள்ளை மாளிகை சென்றடைந்ததும் மெலனியா டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், புதிய இல்லத்தில் உருவாக உள்ள நல்ல நினைவுகளை எதிர்பார்த்து உள்ளோம் பதிவிட்டுள்ளார்.
 
டிரம்பின் மகனான பர்ரோன் டிரம்ப் தனது பள்ளி ஆண்டை நிறைவு செய்வதற்காக மெலனியா டிரம்ப் நியூயார்க்கிலேயே வசித்ததாக கூறப்படுகிறது. 
 
வரும் கல்வி ஆண்டு முதல் பர்ரன் டிரம்ப் வெள்ளை மாளிகை அருகில் இருக்கும் பள்ளியில் சேர்ந்து பயில போவதாகவும் தெரியவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்