கொரோனா பற்றி முன்பே ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்பட்டதா? பொருளாதார நிபுணர் கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (16:25 IST)
கொரோனா வைரஸ் பரவலால் அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார சேதாரமும்,  உயிர்பலியும் ஏற்படலாம் என ட்ரம்ப்புக்கு அறிக்கை அனுப்பியதாக பொருளாதார ஆலோசகர்கள் குழுவைச் சேர்ந்த தோடாஸ் பிலிப்சனின் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப்பின் பொருளாதார நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த அறிஞர்கள் ஒரு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கையில் பெருந்தோற்று நோய் ஒன்றின் மூலம் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் உயிர்பலி ஏற்படலாம் என்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதை ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் காலம்தாழ்த்தியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அந்த குழுவில் இருந்த ஒருவரான தோடாஸ் பிலிப்சனின் இதை இப்போது வெளிப்படுத்தியுள்ளார். இது அமெரிக்காவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்