ஜெய்ஸ்ரீ ராம் சொல்லு..! மொட்டையடிக்கப்பட்ட நேபாளி! – உத்தர பிரதேச கும்பல் அட்டகாசம்!

ஞாயிறு, 19 ஜூலை 2020 (13:11 IST)
உத்தர பிரதேசத்தில் நேபாளி ஒருவரை மர்ம கும்பல் பிடித்து மொட்டையடித்து ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பேசியபோது ராமர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும், அவர் வாழ்ந்த அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாள பிரதமருக்கு எதிராக நேபாளத்திலும், இந்தியாவிலும் கண்டன குரல்கள் ஒலித்த நிலையில், தான் தவறான அர்த்தத்தில் அவ்வாறு கூறவில்லை என நேபாள பிரதமர் விளக்கமளித்தார்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆசாமிகள் சிலர் அங்கு பணி புரிந்து வந்த நேபாளி ஒருவரை வலுகட்டாயமாக இழுத்து சென்று மொட்டையடித்துள்ளனர். மேலும் அந்த நேபாளியை ஜெய்ஸ்ரீ ராம் என்று சொல்லும்படியும், நேபாள பிரதமரை திட்ட சொல்லியும் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த செயலில் ஈடுபட்ட நால்வரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நேபாள தூதர் நிலம்பார் ஆச்சார்யா உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசியுள்ளார். அதற்கு யோகி ஆதித்யநாத் குற்றவாளிகள் மேல் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்