உலக வரலாற்றில் முதல் முறையாக!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (23:57 IST)
தென் அமெரிக்க நாட்டின் ஈக்குவடாரை சேர்ந்தவர்கள் பெர்ணான்டோ மற்றும் டியான் திருநங்கை தம்பதி. 


 
 
இவர்களில் பெர்ணான்டோ பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். தியான் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் நட்பாகி பின் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
 
இவர்கள் இருவருக்கும் மற்றவர்களை போல குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இருவரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. பெர்ணான்டோ, இயற்கையாகவே பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் என்பதால் அவருக்கு கர்ப்பை இருந்தது. எனவே அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதால் பெர்ணான்டோ இயற்கையாகவே கர்ப்பம் தரித்தார்.
 
இந்த கர்ப்பத்தின் வாயிலாக கடந்த ஜூன் மாதம் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்து உள்ளார். ஆனால் மற்ற பெண்களை போல சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்