குழந்தைகளுக்கு பாலுக்கு பதில் ஒயின் கொடுத்த தந்தை ... பகீர் சம்பவம்

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (20:37 IST)
உக்ரைன் நாட்டில் குழந்தைகளுக்கு உணவுக்குப் பதிலாக, ஒயின் என்படும் மதுவகைகளை ஊற்றிக் கொடுத்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் கெர்சோன் அருகில் உள்ள சாப்லிங்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர் மைகோலா இவரது மனைவி அல்கா. இந்த தம்பதிக்கு மரியானா என்ற மகள் மற்றும் லூடா என்ற மகள் உள்ளனர். 
 
இந்நிலையில் வேலை நிமித்தமாக அல்கா வெளியில் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இருந்த மைகோலா, மதியவேளையில் குழந்தைகளின் பசிக்கு உணவைக் கொடுக்காமல், பிரிட்ஜில் வைத்திருந்த ஒயினை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
 
அதனால் ஒயினைக் குடித்த குழந்தை தள்ளாடிபடி மயங்கி விழுந்துள்ளனர். அதைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் குழந்தைகளை சோதித்த போது, அவர்கள் வாயில் மதுவாடை அடித்துள்ளது. பின்னர், உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
குழந்தைகளுக்கு கொடுத்த மது விஷமாக மாறி அவர்களை கோமா நிலைக்கு தள்ளியுள்ளது. பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு மருத்துவர்கள் குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர்.
 
இதனையடுத்து உயிர்பிழைந்த மகள்கள் இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களின் தந்தையான மைகோலாவை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்