இஸ்ரேல் வீசிய குண்டு; நல்வாய்ப்பாக தப்பிய பயணிகள் விமானம்! - வைரலாகும் வீடியோ!

Prasanth Karthick
வெள்ளி, 15 நவம்பர் 2024 (09:47 IST)

இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையே போர் நடந்து வரும் நிலையில் லெபனான் விமான நிலையம் அருகே இஸ்ரேல் வீசிய குண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான போரை தொடர்ந்து, ஹமாஸ்க்கு ஆதரவாக களமிறங்கிய ஹெஸ்புல்லா அமைப்பு, வடக்கிலிருந்து இஸ்ரேலை தாக்கி வந்தது. இதனால் ஹெஸ்புல்லா அமைப்பின் ஆதிக்கம் உள்ள லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி, தரைவழி தாக்குதல்களை நடத்தி வருவதுடன், ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகளையும் கொன்றுள்ளது.

 

இந்நிலையில் சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. பயணிகள் விமானம் ஒன்று பெய்ரூட் விமான நிலையத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்போது, விமான நிலையம் அருகே வானிலிருந்து வீசப்பட்ட குண்டு விழுந்து வெடித்து கரும்புகை உண்டாகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்