பிறந்ததும் இறந்த குழந்தை ... தாய்ப்பாலை தானம் செய்த தாய்... நெகிழ்ச்சியான சம்பவம் !

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (19:08 IST)
பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தை பிறந்ததும் அதைக் கொஞ்ச தாய் எத்தனை ஆசை கொண்டிருப்பாரோ அத்தனை ஆசைகள் கொண்டிருந்தார், இளம் தாய் சியரா ஸ்ட்ராங்பீல்ட். 
இவரது வயிற்றில் குழந்தை வளர்ந்து வந்த போதே, குழந்தைக்கு  டிரிசோமி 18 என்ற ஒரு புதுவகை நோய் இருப்பதை டாக்டர்கள் சொல்ல தெரிந்துகொண்டார். அதனால் டாக்டர்கள் கருவை கலைந்து விடுமாறு கூறியும் அதை சியரா கேட்கவில்லை.
 
பின்னர், குழந்தை பிறந்ததும், அதற்கு சாமுவேல் என்று பெயரிட்டார். ஆனால் மூன்று மணிநேரத்திலேயே குழந்தை இறந்துபோனது.
 
இதனைத்தொடர்ந்து, மகள் சாமுவேல் இறந்ததன் நினைவாக , அடுத்த 63 நாட்களுக்கு தனது தாய்ப்பாலை தானம் செய்ய முன்வந்துள்ளார் சியரா.
 
மேலும், வெஸ்டர்ன் கிரேட் பகுதியில் அமைந்துள்ள மதர்ஸ் மில்க் என்ற பேங்கிற்கு இவர் 500 அவுன்ஸ் தாய்ப்பாலை தானம் செய்து, ஒரு தாய்மையின் கருணை உள்ளத்தை உலக மக்களுக்கு அறியச் செய்துவிட்டார். இவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்