மின்சார வயர்களில் சிக்கி ... அந்தரத்தில் தொங்கிய விமானம் !

செவ்வாய், 26 நவம்பர் 2019 (14:54 IST)
அமெரிக்காவில் மின்சார வயர்களில் சிக்கி, விபத்துக்குள்ளான சிறிய விமானத்தில் இருந்து விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். 
அமெரிக்கா நாட்டில் மின்னசோட்டா என்ற பகுதியில் ஒரு சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
 
அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், தாழப்பறந்து, அங்குள்ள மின்சார ஒயர்களில் சிக்கியது,
 
அந்தரத்தில் தொங்கிய விமானத்தில், இருந்த விமானி வெளியே வரமுடியாமல் தவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்சாரத்தைத் துண்டித்து, விமானத்தை அகற்றி, அதில் போராடிக் கொண்டிருந்த விமானியையும் மீட்டனர்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்