15 வயது சிறுவனை மயக்கி உல்லாசம்....ஆசிரியைக்கு வாழ்நாள் தடை!

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (14:02 IST)
பிரிட்டன் பக்கிங்காம்ஷைர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் கேண்டிஸ் பார்பர்.

இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்,  கடந்த 2018 ஆம் ஆண்டு, பள்ளியில் இவரிடம் படித்த 15 வயது மாணவனுக்கு ஆபாசமாக வார்த்தைகள் அனுப்பியும், ஆபாசமான புகைப்படங்கள் அனுப்பிய அவரை ஆசையை தூண்டியதாகவும்,  பின்னர், ஒரு தனியிடத்திற்கு அழைத்துச் சென்று  சிறுவனுடன் உடலுறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக  ஆசிரியை மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியைக்கு 6 ஆண்டுகள் 2 மாதம் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீதான பாலியல் புகார் பற்றி துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது.  இந்த விசாரணையில், அவர் எந்தக் கல்வி நிறுவனத்திலும் வேலை பார்க்க தகுதியற்றவர் என்று விசாரணைக்குழு கூறியது.

இந்த விசாரணை அடிப்படையில், ஆசிரியை கேண்டிஸ் பார்பர்  காலவரையின்றி ஆசிரியர் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டார்.அவர் மீண்டும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் அனுமதியும் மறுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்