சிறையில் தமிழக மீனவர்கள்..! மார்ச் 22 வரை காவல்..! இலங்கை நீதிமன்றம்..!!

Senthil Velan
ஞாயிறு, 10 மார்ச் 2024 (17:28 IST)
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை மார்ச் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மீனவர்கள் அடைக்கப்பட்டனர்.
 
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதோடு படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றன.  இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் காரைக்காலை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, மூன்று விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளது. 

ALSO READ: மக்களவைத் தேர்தல் எப்போது..? விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு..!!
 
இந்நிலையில் கைதான மீனவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 22 பேரை மார்ச் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்