கோத்தபய ராஜபக்சேவுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்: இலங்கை அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (13:22 IST)
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேஇலங்கைக்கு மீண்டும் திரும்பினால் அவருக்கு தேவையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என இலங்கை அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 
இலங்கையில் தற்போது பெரும் போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பிச் சென்று விட்டார் என்பதும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கைகளை ஏற்று அவருக்கு கொழும்புவில் அதிகாரப்பூர்வ இல்லம், பாதுகாப்பு படை, வாகனங்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று  ஜி எல் பீரிஸ் கூறியுள்ளார் 
 
கோத்தபய ராஜபக்சே அடுத்த மாதம் இலங்கை திரும்புவார் என்றும் இலங்கைக்கு அவர் திரும்பியதும் இந்த சலுகைகளை அவர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜி எல் பீரிஸ் கூறியுள்ளார்
 
இலங்கை மக்கள் பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில் இலங்கை கோத்தபய ராஜபக்சவுக்கு இந்த வசதிகள் தேவையா என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்