இலங்கையை திவாலில் இருந்து காப்பாற்ற ஒரே ஒரு வழி தான் உள்ளது என்றும் பொருளாதாரச் சரிவிலிருந்து இலங்கையை மீட்க சர்வதேச நாணய நிதியம் உதவி செய்ய வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொருளாதார சரிவு காரணமாக இலங்கை திவால் ஆனது என்பது நாட்டில் விலைவாசி விண்ணைத்தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்று பேசிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஒரு நாடு திவால் ஆகும் போது சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டுமே செல்ல முடியும் என்றும் சரிந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு கிரீஸ் 13 வருடங்கள் எடுத்துக்கொண்டதையும் உதாரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்காவிட்டால் கடந்த ஆண்டு எரிபொருள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் 12 மணி நேரம் மின்வெட்டு போன்ற நிலைக்கு திரும்ப வேண்டி இருக்கும் என்றும் கூறினார். இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.