இலங்கை: நீதிபதியின் உயிரை காப்பாற்றி தன் உயிரை இழந்த போலீஸ்காரர்

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (06:00 IST)
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் என்ற தமிழர் பகுதியில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வரும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் என்பவரின் உயிரை காப்பாற்றி தனது உயிரை தந்த போலீஸ்காரர் ஒருவரை அந்நாட்டு மக்கள் புகழ்ந்து வருகின்றனர். 



 
 
யாழ்ப்பாண நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் என்பவர் மிகவும் கண்டிப்பானவர் நேர்மையானவர் என்று கூறப்படுகிறது. அவர் தற்போது ஒரு மாணவி ஒருவரின் பாலியல் வன்முறை வழக்கை விசாரணை செய்து வருகிறார். இந்த வழக்கில் போலீஸ் டிஐஜி ஒருவர் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் தனது பாதுகாவலருடன் காரில் சென்று கொண்டிருந்தார். கார் சிக்னலில் நின்றபோது மர்ம நபர் ஒருவர் திடீரென நீதிபதியை நோக்கி சரமாரியாக சுட்டார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர், நீதிபதியின் மீது துப்பாக்கி குண்டுகள் படாமல் காப்பாற்றினார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் போலீஸ்காரரின் உயிர்த்தியாகத்தால் நீதிபதி காயமின்றி உயிர் தப்பினார்.
அடுத்த கட்டுரையில்