ரஜினி, கமல் வந்தாலும் என்னை அசைக்க முடியாது: விஜயகாந்த்

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (05:33 IST)
தமிழக அரசியலே கடந்த சில நாட்களாக ரஜினி, கமல் ஆகிய இருவரையும் தான் சுற்றி வருகிறது. இருவரும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ அரசியலுக்கு வருவது உறுதி என்றே அனைவரும் கணித்துள்ளனர்.



 
 
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக கட்சி நடத்தி வரும் விஜயகாந்த், ரஜினி, கமல் என எத்தனை நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் தனக்கு ஒரு கவலையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் சில மாதங்கள் அமைதியாக இருந்த விஜயகாந்த் தற்போது மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். நேற்று கதிராமங்கலத்தில் போராடும் விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு கொடுத்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
'ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வரட்டும். இன்னும் நான்கு நடிகர்களும் வரட்டும். எனக்கு எந்த கவலையும் இல்லை. என்று கூறினார். மேலும் இந்தி படிப்பதையெல்லாம் திணிப்பு என்று சொல்லக் கூடாது. அது திணிப்பு அல்ல என்றும் தமிழக அரசியலில் இப்போது நிலவுத் பிரச்சினைகளுக்கு மூல காரணம் திமுகதான் என்றும் விஜயகாந்த் கூறினார்.,
 
அடுத்த கட்டுரையில்