கொரோனாவை கட்டுப்படுத்தும் பாம்பு விஷம்? – பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (15:02 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரேசில் ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சி வைரலாகியுள்ளது. Jararacussu pit Viper என்ற பாம்பின் விஷத்தை கொரோனா பாதித்த குரங்கு ஒன்றின் மேல் ஆய்வு செய்ததில் வைரஸை 75% கட்டுப்படுத்தியுள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த ஆய்வை விரிவுப்படுத்த மருத்துவ ஆய்வாளர்கள் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்