கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணியில் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் மிக மோசமாக விளையாடி வந்தனர். லீட்ஸ் டெஸ்ட்டில் புஜாரா தட்டு தடுமாறி 91 ரன்கள் சேர்த்து தன் இடத்தைக் காப்பாற்றிக் கொண்டார். இந்நிலையில் ரஹானே மீது இப்போது விமர்சனங்கள் அதிகமாக எழ ஆரம்பித்துள்ளன.