அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், ஒரு காலத்தில் தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அவர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டதும் நமக்குத் தெரிந்ததே.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தபின், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பின், பாஜக உதவியுடன் மீண்டும் அதிமுகவில் இணைய ஓ.பி.எஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில், “அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம்” என்று அமித்ஷா நேற்று உறுதியாக கூறினார்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் இணையும் வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தனி கட்சி தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார் என்றும், அந்தக் கட்சிக்கு "எம்ஜிஆர் அதிமுக" என்ற பெயர் வைக்க அதிக வாய்ப்பு உள்ளதென கூறப்படுவது, தற்போதைய தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.