பதவியேற்ற ஒருசில மணி நேரங்களில் 11 இளவரசர்கள் கைது! சவுதி அரேபியா இளவரசர் அதிரடி

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2017 (14:33 IST)
சவுதி அரேபியா இளவரசராக சமீபத்தில் முகம்மது பின் சல்மான் என்பவர் பதவியேற்றார் என்பது தெரிந்ததே. சவுதியில் உள்ள இளவரசர்கள், கோடீஸ்வரர்கள் பல ஊழல் செய்து வருவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டிய நிலையில் இளவர்சர் சல்மான் அதிரடியாக ஊழல் ஒழிப்புக்குழு என்ற அமைப்பை தொடங்கி அதற்கு அவரே தலைமை தாங்கினார்.


 


இந்த அமைப்பிற்கு தலைமை தாங்கிய ஒருசில மணி நேரங்களில் அவர் ஊழலில் ஈடுபட்டிருந்த அரச குடும்பத்தை சேர்ந்த 11 இளவரசர்களையும்,மூன்று அமைச்சர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி சவுதியின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகிய அல் வலீத் பின் தலால் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுதி இளவரசர் சல்மானின் இந்த நடவடிக்கை உலகமே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது. மக்களுக்கு சேர வேண்டிய பணம், ஊழல் என்ற பெயரில் ஒருசிலரிடம் மட்டும் போய் தங்குவதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஊழல் செய்பவர்களின் பதவிகள் பறிக்கப்படுவதோடு அவர்களது சொத்துக்களும் முடக்கப்படும் என்றும் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இதுபோல் ஒரு இளவரசர் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு எப்போது வருவார்?

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்