ஊழலில் சிக்கிய 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (22:04 IST)
சீனாவில் அதிபர் ஜின்பிங் தலைமையியான கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு  ஊழல்கள் அதிகரிப்பதாக மக்களிடம் இருந்து  புகார்கள் அதிகரிடத்த நிலையில், இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டார் அதிபர்.

இந்த நிலையில், ஊழல் புகாரில் அதிர்ச்சிகரமாக சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியுள்ளளதாக இந்தோ பசிபிக்தொடர்பு மையம் ஒரு அறிக்கை  வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த ஊழல் புகாரில்,  மாநில அளவிலான உயர்நிலை அதிகாரிகள், துணை அதிகாரிகள், ராணுவ கமிஷன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளாது.

இதுவரை பெறப்பட்ட சமார் 7 லட்சத்து  76 மனுக்களில் ஊழல் புகார் சம்பந்தமாக 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்