பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முன்னாள் பிரதமர் இம்ரான் ஆட்சியின் போது, அதிக சொத்துகள் சேர்த்ததாகவும், ஊழல் செய்ததாகவும், வெளிநாட்டில் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, இவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அத்துடன், இவர் ஆளும் அரசிற்கு எதிராக கருத்துகள் கூறுவதும் விமர்சிப்பதுமாக இருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்யின் ன் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சில வழக்குகள் தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராகும் பொருட்டு அவர் லாகூரில் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.