ஒமிக்ரானை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம்! – அதிபர் ஜோ பைடன்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:16 IST)
ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.

இந்நிலையில் ஒமிக்ரான் குறித்து பேசியுள்ள அதிபர் ஜோ பைடன் “தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவும் ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி இதுபோன்ற வைரஸ்களை எதிர்க்கும் தன்மை உடையதுதான். அமெரிக்காவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்