போரை நிறுத்த இந்தியா எல்லா முயற்சியையும் செய்யும்! – உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி வாக்குறுதி!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (11:01 IST)
உக்ரைன் – ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உக்ரைன் அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 400 நாட்களை கடந்து விட்டது. ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளுடன் ரஷ்யாவை தொடர்ந்து உக்ரைன் எதிர்த்து வருகிறது. அதேசமயம் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா – உக்ரைன் இடையே போரை நிறுத்த சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஜப்பானில் நடந்து வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் சந்தித்துக் கொண்டனர். அப்போது உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தன்னாலான அனைத்தையும் செய்யும் என பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார். மேலும் இது பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாக அல்லாமல், மனித உயிர்கள் சார்ந்த விஷயமாகவே தான் பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்