பாகிஸ்தானுக்கு இனி எந்த நிதி உதவிகளும் கிடையாது: அமெரிக்கா அதிரடி!!

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (13:41 IST)
பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த ரூ. 23 லட்சம் கோடி மதிப்பிலான நிதி உதவியை அமெரிக்கா ரத்து செய்து உள்ளது.


 
 
தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது. அப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
 
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. நிதி உதவி அளித்தும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுபடுத்துவதாக தெரியவில்லை எனவே அமெரிக்கா நிதி உதவியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
அடுத்த கட்டுரையில்