விமானத்தில் சாப்பாட்டு பிரச்சனைக்காக இரு விமானிகள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் மாஷாத் நகரில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாதுக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் 157 பயணிகள் இருந்தனர். அந்த விமானத்தின் துணை விமானி பணிப்பெண்ணை அழைத்து தனக்கு சாப்பாடு எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
இதனை விமானி தடுத்து நிறுத்தியுள்ளார். விமானியான நானே எனது உணவை எடுத்து சாப்பிட்டேன். துணை விமானி பணிப்பெண்ணிடம் உணவு எடுத்து வர சொல்லி சாப்பிடுவதா என சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போகவே இரு விமானிகளுக்கிடையே கைக்கலப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விஷயம் போக்குவரத்து அமைச்சகத்திற்கு தெரிய வரவே அந்த இரு விமானிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.