குப்பைகளில் உணவை தேடி அலையும் மக்கள்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (21:02 IST)
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 
 
இந்த பாதிப்பில் இருந்தே மக்கள் வெளிவராத சூழ்நிலையில் அங்கு அடுத்து எரிமலை வெடிப்பும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீப்பு பணிகள் துறிதமாக நடந்து வரும் நிலையிலும் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 
 
இதில் பெரும் கொடுமை என்னவென்றால், சுனாமி தாக்குதலில்  இருந்து தப்பித்த மக்கள் உணவின்றி குப்பைகளில் உணவும் மற்றும்  தண்ணீரை தேடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
 
சுமார் 1 லட்சம் பேர் அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருவதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்