மீண்டும் நிலநடுக்கம் - பீதியில் இந்தோனேஷிய மக்கள்

செவ்வாய், 2 அக்டோபர் 2018 (12:53 IST)
இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. 
 
கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் இந்த பேரழிவிலிருந்தே இன்னும் மீண்டு வர முடியாத நிலையில், தற்பொழுது அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்