மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோர் கைது! அதிரடி உத்தரவு..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:13 IST)
மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 சவுதி அரேபியாவில் மாணவர்கள் முறையான காரணம் இன்றி, 20 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என சவுதி அரேபியா அரசு புதிய சட்டம் இயற்றி உள்ளது. 
 
மாணவர்கள் பள்ளிக்கு வராததால் பெற்றோர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் பெற்றோர்கள் விடுதலை ஆகும் வரை சம்பந்தப்பட்ட மாணவர்கள் காப்பகத்திற்கு தங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  
 
மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோர்களுக்கு கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற சவுதி அரேபியாவின் புதிய சட்டம் அந்நாட்டு பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்