ட்ரம்ப் கூட்டங்களால் மட்டும் 30000 பேருக்குக் கொரோனா!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (11:14 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் இம்மாதம் நடக்க உள்ளது. அதற்காக தற்போதைய அதிபர் ட்ரம்ப் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

உலகிலேயே அதிக சர்ச்சைக்குரிய நபராக இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் இருந்து வருகிறார். விரைவில் அமெரிக்க தேர்தலில் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். உலகிலேயே கொரோனாவால் அதிக பாதிப்படைந்த நாடாக அமெரிக்கா இருப்பதற்கு ட்ரம்பின் ஆட்சிதான் காரணம் என சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் அடுத்து வரும் தேர்தலிலும் அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காக அவர் 18 தேர்தல் பிaரச்சாரக் கூட்டங்களை நடத்தியுள்ளார். அதன் மூலம் மட்டுமே சுமார் 30000 பேருக்குக் கொரோனா பரவி இருக்கலாம் என சொலல்ப்படுகிறது. இதில் 700 க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்