மருத்துவமனைகளின் தேவை அதிகரிக்கும் - எச்சரிக்கும் WHO!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (10:53 IST)
ஒமிக்ரான் வைரஸால் பல்லாயிரம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய மாறுபட்ட கொரோனா வைரஸான ஒமிக்ரான் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பல ஒமிக்ரான் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. தற்போது அது 57 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதோடு பல்லாயிரம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும். 
 
ஆனால் டெல்டா வைரஸின் பாதிப்பை விடவும் குறைவான பாதிப்பு தான் ஒமிக்ரானால் ஏற்படும். எனவே தவறாமல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்