அடங்கமாட்டாங்க போல..! மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணை சோதனை?

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (09:51 IST)
கடந்த சில காலமாக தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வரும் வடகொரியா இன்றும் தென்கொரியா அருகே ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா கடந்த 10 நாட்களுக்குள் 5 முறை பாலிஸ்டிக் உள்ளிட்ட அபாயகரமான ஏவுகணைகளை சோதனை நடத்தியுள்ளது.

ALSO READ: 62.48 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

சமீபத்தில் ஜப்பான் வான் பரப்பின் மேல் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதால் ஜப்பானில் அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் தென்கொரியாவை நோக்கி தனது ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது வடகொரியா.

அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து வடகொரியா செயல்பட்டு வருவதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்