உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனை, ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. ஆனாலும் வடகொரியா தொடர்ந்து ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் வடகொரியாவை சமாளிக்கும் விதமாக அவ்வபோது அமெரிக்க, தென் கொரிய ராணுவங்கள் இணைந்து கூட்டு ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் இதற்காக அமெரிக்க போர்க்கப்பலான “யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன்” கொரிய எல்லைக்குள் வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் தனது ஜப்பான் பயணம் முடிந்து தென்கொரியா செல்ல உள்ளார். அவர் தென்கொரியா செல்லும் நேரத்தில் அணுகுண்டு சோதனையை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் இந்த பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.