நீங்க வயசானா எப்படி இருப்பீங்க - இணையத்தில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் சேலஞ்ச்

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (16:34 IST)
இளவயது போட்டோவை முதுமையான போட்டோவாக மாற்றி அதை சமூகவலைதளங்களில் பதிவிடும் ஃபேஸ் ஆப் சேலஞ்ச் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில சேலஞ்ச்கள் பரவலாக ட்ரெண்டாகும். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பாட்டில் ஓபன் சேலஞ்ச் வரிசையில் இப்போது ஃபேஸ் ஆப் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் தங்களை புகைப்படம் எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து வயதான நபர் போல மாற்றுகின்றனர். தனது தற்போதைய போட்டோவையும், வயதான போட்டோவையும் சேர்த்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களுக்கு இதுபோன்ற வயோதிக பிம்பத்தை எடிட் செய்து வெளியிட்டனர். அது பிரபலமாகவும் தொடர்ந்து நெட்டிசன்கள் இந்த சேலஞ்சில் பங்கெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்