கிரீஸ் நாட்டில், ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வந்த விமானம், சுற்றுலா பயணிகளின் தலையை உரசும் அளவுக்கு பறந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தரையிறங்க வரும் விமானங்கள் தாழ்வாக பறக்கும்போது, சுற்றுலா பயணிகள் பலர் அதன் கீழிருந்து செல்ஃபி எடுத்துக்கொள்வது வழக்கம். சில நேரங்களில் அவ்வாறு தரையிறங்குவதற்காக தாழ்வாக பறக்கும் விமானங்களின் சக்கரங்கள் தலையில் இடித்து சிலர் உயிரிழக்கின்றனர். ஆனால் இது போன்ற ஆபத்துகளை பொருட்படுத்தாது சிலர் தாழ்வாக பறக்கும் விமானங்களின் கீழ் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில் கிரீஸ் நாட்டில், தரையிறங்குவதற்காக தாழ்வாக பறந்துவந்த விமானம் ஒன்று வழக்கத்தை விட மிகவும் தாழ்வாக, சுற்றுலா பயணிகளின் தலையை உரசும் அளவுக்கு பறந்து சென்றுள்ளது. இதனை அங்குள்ள சுற்றுலா பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.