தேவையில்லாம இந்தியா மேல பழி போடாதீங்க! – பிரதமருக்கு சொந்த கட்சியனரே எச்சரிக்கை!

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (08:19 IST)
இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கும் நேபாள பிரதமருக்கு அவரது கட்சியனரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுன் எல்லைப்பகுதியில் சீனா நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நேபாளமும் தன் பங்குக்கு எல்லை பிரச்சினையை உண்டாக்கி வருகிறது. புதிதாக வெளியிட்ட நேபாள வரைபடத்தில் இந்திய எல்லைகளை ஆக்கிரமித்து வரைபடத்தை வெளியிட்டுள்ளது நேபாளம். இதற்கு இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசி வருவது இந்திய – நேபாள உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் வகையாக இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கட்சி பொதுக்குழு கூட்டம் ஒன்றில் பேசியுள்ள கேபி சர்மா, இந்தியா தன்னை உளவு பார்த்து வருவதாகவும், தன்னை பதவியிலிருந்து நீக்க இந்திய தூதரகம் சதி செய்வதாகவும் கூறியுள்ளார்.

அவரது இந்த பேச்சு அவரது கட்சியினருக்கே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை இந்தியா பதவியிலிருந்து நீக்க முயற்சிப்பதாக பிரதமர் பேசியிருப்பது முறையானது அல்ல என்று பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேபி சர்மாவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கட்சிக்குள்ளேயே குரல்களும் ஒலிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்