மத ரீதியான பாகுபாடு காட்டுகிறதா இந்திய போலீஸ்?

செவ்வாய், 30 ஜூன் 2020 (12:50 IST)
இந்தியாவில் 12,000 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினரிடம் எடுக்கப்பட்ட தேசிய அளவிலான ஒரு கணக்கெடுப்பில், முஸ்லிம்கள் இயல்பாகவே குற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது என அதில் கலந்துகொண்ட சுமார் பாதி அளவு காவலர்கள் நினைப்பதாக தெரிய வந்துள்ளது.

நாட்டில் கொரோனா ஊரடங்கை அமல்படுத்த காவல்துறையினர் தங்கள் இரும்புக் கரங்களை பயன்படுத்தினர்.

இந்திய வாழ்க்கையில் காவல்துறை அத்துமீறல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பொதுவாக ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களே இதன் இலக்காக இருக்கிறார்கள்.

இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு மட்டும் தினசரி தோராயமாக ஐந்து பேர் போலிஸ் காவலில் மரணமடைந்துள்ளனர்.

இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில் சிறுபான்மையினர் அடிக்கடி போலிஸ் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம், தலைநகர் டெல்லியில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில் காவல்துறை ஒருபக்க சார்பாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

செய்தி: ரஜினி வைத்தியநாதன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்