செவ்வாயில் தரையிறங்கும் பெர்சவரன்ஸ்! – முதல் வீடியோவை வெளியிட்ட நாசா!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:25 IST)
செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகளை சேகரிக்க நாசா அனுப்பிட பெர்சவர்ன்ஸ் தரையிரங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ள நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக சில ரோவர்கள் அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்த நிலையில் அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வர நாசா திட்டமிட்டது.

இதற்காக உருவாக்கப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது கடந்த 8 மாத காலமாக விண்வெளி பயணம் மேற்கொண்ட பெர்சவரன்ஸ் கடந்த 19ம் தேதி செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்நிலையில் பெர்சவரன்ஸ் தரையிறங்கும் காட்சிகள், செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் நுழையும் காட்சிகளை நாசா ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்