கும்பமேளாவுக்காக செல்லும் பக்தர்களை கட்டுப்படுத்த போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லி காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவர்களுக்கு டெல்லி போலீசார் உறுதுணையாக இருப்பார்கள் என்றும், தேவைப்பட்டால் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.