பூமியை நோக்கி வரும் விண்கல்: நேரடியாக காணலாம்!!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (16:07 IST)
அமெரிக்காவில் உள்ள ஹவாயில் ஹலீயாகலா எரிமலை பகுதியில் யான் ஸ்பார்ஸ் 1 என்ற சக்தி வாய்ந்த டெலஸ் கோப் நிறுவப்பட்டது.


 

 
கடந்த 25 ஆம் தேதி இந்த டெலஸ்கோப் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் ஒரு எரிகல்லை புகைப்படம் எடுத்து அனுப்பியது. 
 
அந்த விண்கல் பூமிக்கு அருகில் வந்துள்ளது. அதாவது பூமிக்கு சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது. 
 
இந்த எரிகல்லை டெலஸ் கோப் இன்றி நேரடியாக பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
பூமிக்கோ, சந்திரனுக்கோ எந்தவித பெரிய அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் பூமியை தாக்கும் அபாயமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்