பிரசவ வலியால் துடித்த மனைவியை பலாத்காரம் செய்த கணவன்: சில நிமிடங்களில் பிறந்த குழந்தை!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (09:54 IST)
இங்கிலாந்தின் ஹல் நகரில் இருவர் திருமணம் செய்யாமல் 7 வருடமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் உடலுறவு கொண்டதில் அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் பிரசவ வலியால் துடித்த போதும் கூட அந்த ஆண் நபர் அவரை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வர நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண் தன் ஆடைகளை களைந்து படுக்கையில் கையையும், காலையும் ஊன்றி வலியால் துடித்துள்ளார்.
 
இதனை பார்த்த ஆண் நண்பர் அவருடன் உடலுறுவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தான் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறேன் தற்போது முடியாது என மறுத்துள்ளார். ஆனால் கொஞ்சம் கூட இரக்கமில்லாத அந்த நபர் அந்த பிரசவ வலியிலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
 
பின்னர் சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அந்த பெண் இது குறித்து தனது நண்பர் மீது புகார் அளித்தார். தற்போது இந்த வழக்கு ஹல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்