சிறுநீர் கழித்தால் திருப்பி அடிக்கும் சுவர்! – லண்டனில் நூதன நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (11:30 IST)
லண்டனில் சில பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் வகையில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல நாடுகளில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது என்பது பெரும் சுகாதார பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட பலர் அதை பின்பற்றுவதில்லை.

லண்டனிலும் பல பகுதிகளில் இதுபோல பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் சம்பவம் பிரச்சினையாக உள்ளது. இதை தடுக்க லண்டன் புதிய உத்தியை பயன்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக லண்டனின் சோஹோ பகுதியில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீதே திரும்ப அடிக்கும் வகையில் Anti pee paint சுவர்களில் பூசப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 10 இடங்களில் இந்த பெயிண்ட் பூசப்பட்டுள்ள நிலையில் அதன் வெற்றியை பொறுத்து பல பகுதிகளிலும் இந்த பெயிண்டை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்