இந்தியாவின் நண்பன் என்ற முறையில் உதவி செய்கிறோம்: கமலா ஹாரிஸ் அறிவிப்பு

Webdunia
சனி, 8 மே 2021 (08:18 IST)
இந்தியாவின் நண்பன் என்ற முறையில் உதவி செய்கிறோம் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் நான்கு லட்சத்தை விட அதிகமாக இருக்கும் நிலையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றன. அதேபோல் அமெரிக்காவும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், மருந்து பொருட்க்ள் உள்பட பல்வேறு மருத்துவ உபகரண பொருள்களை அனுப்பி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவர்கள் கூறியபோது இந்தியாவிற்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முகக்கவசங்களை அமெரிக்க வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் மேலும் உதவும் தயாராக இருக்கிறோம் 
 
அமெரிக்காவிற்கு தேவையான காலத்தில் இந்தியா உதவியது. தற்போது இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவி செய்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் கொரோனா தோற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்