8.9 பில்லிடன் டாலர் தறோம்.. வழக்குகளை முடிங்க! – டீல் பேசும் ஜான்சன் அண்ட் ஜான்சன்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (09:53 IST)
குழந்தைகளுக்கான ஷாம்பூ, பவுடர் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு புற்றுநோயை உண்டாக்குவதாக தொடரப்பட்ட வழக்கில் இழப்பீடு தர அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பூ, ஸ்கின் லோஷன் உள்ளிட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன். இந்த நிறுவனத்தின் பேபி பவுடர் புற்றுநோயை உண்டாக்குவதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் காரணமாக சில பகுதிகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கினால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்புகளை மக்கள் வாங்க தயக்கம் காட்டியதால் விற்பனையும் வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து வழக்கு தொடுத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு 8.9 பில்லியன் டாலர் தர ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முன்வந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் “இந்த வழக்கு விவகாரத்தில் விரைவாகவும், திறமையாகவும் தீர்வு காணவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எங்களின் தயாரிப்புகள் எப்போதும் பாதுகாப்பானதே” என்று தெரிவித்துள்ளது. எனினும் ஜான்சன் அண்ட் ஜான்சனின் இந்த முன்மொழிவை ஏற்பது குறித்து நீதிமன்றம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்