யார் யாரெல்லாம் நிலாவுக்கு வறீங்க! – ஃப்ரீ டிக்கெட் தரும் தொழிலதிபர்!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (16:42 IST)
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு அனுப்பவுள்ள விண்கலத்தில் பயணிக்க இலவச டிக்கெட்டுகள் தருவதாக ஜப்பானிய தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ”டியர் மூன்” என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் முதன்முறையாக பொதுமக்களை நிலவுக்கு அழைத்து செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி மக்களை நிலவுக்கு அழைத்து செல்ல ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த விண்கலத்தில் பயணிக்க உலகம் முழுவதிலுமிருந்து 8 பேரை தேர்ந்தெடுக்க உள்ளதாக ஜப்பானிய தொழிலதிபர் மொய்சவா அறிவித்துள்ளார். இந்த விண்கலத்தில் பயணிக்க தன்னுடன் மேலும் 8 பேருக்கு முன்பதிவு செய்துள்ளார் மொய்சவா.

இதுகுறித்து அவர் கூறும்போது நிலவில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது. அதுபோல என்னுடன் மேலும் 8 பேரை அழைத்து செல்ல விரும்புகிறேன். விண்வெளிக்கு பயணிக்க விருப்பம் உள்ளவர்களும், விண்வெளிக்கு செல்பவர்களுக்கு உறுதுணையாக, உதவியாக இருப்பவர்களும் இந்த இலவச டிக்கெட்டுகளை பெற தகுதியுடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். நிலவிற்கான ஸ்டார்ஷிப் பயணம் 2023ம் ஆண்டில் நடைபெறும் என ஸ்பேஸெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்