பற்றி எரிந்த பிரம்மாண்ட மசூதி; வைரலாகும் வீடியோ! – இந்தோனேஷியாவில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (12:30 IST)
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா பகுதியில் உள்ள பிரம்மாண்டமான மசூதி பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியா நாட்டில் உள்ள ஜகார்த்தா பகுதியில் இஸ்லாமிய மையத்தின் பிரம்மாண்டமான மசூதி அமைந்துள்ளது. சமீப காலமாக இந்த மசூதியை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் வேளையில் கட்டிட பணிகள் நடந்த பகுதியில் புகைமூட்டம் எழுந்துள்ளது. சில நிமிடங்களில் மசூதியின் பிரம்மாண்டமான குவிமாடம் மளமளவென தீப்பற்றியுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

ஆனாலும் முழுவதுமாக பற்றி எரிந்த குவிமாடம் மொத்தமாக இடிந்து விழுந்தது. இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்