உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்தவர்களும் பலி: அதிர்ச்சி தகவல்!

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (16:23 IST)
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்தவர்களும் பலி: அதிர்ச்சி தகவல்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மொத்தம் 7 பேர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் மூன்று பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் இன்று ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்ததை அடுத்து 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதார்நாத் செல்லும் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதாகவும், அதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் உத்தரகாண்ட் மாநிலம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் சுஜாதா, பிரேம்குமார் மற்றும் கலா ஆகிய மூவரும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்